பேஸ்புக் தொடர்பாக இதுவரை 8743 முறைப்பாடுகள்
#Facebook
#Complaint
Prathees
4 years ago
இந்த ஆண்டு இதுவரை பேஸ்புக் தொடர்பாக 8743 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன என்று கணினி அவசர பதில் மன்றத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரவிந்து மீகஸ்முல்ல நேற்றுதெரிவித்தார்.
60 சதவீதத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பெண்களிடமிருந்து வந்தவை என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும் பேஸ்புக் தொடர்பாக 14,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு, மற்றவர்களின் பெயரில் போலி கணக்குகள் அமைக்கப்படுவது தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு முகநூல் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 0112-691692 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.