2021 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் அறிவிப்பு

Prasu
4 years ago
2021  ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் அறிவிப்பு

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11-ந்தேதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்  குறித்து இன்று  அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.  வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!