உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படுமா?
#SriLanka
#exam
Yuga
4 years ago
தற்போதைய சூழ்நிலையில் உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பதே சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.