சஹ்ரானின் தொலைபேசியின் மதர்போர்ட்டை எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!
#Police
Prathees
4 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வழிவகுத்த சஹ்ரானின் மொபைல் போன்களின் முதன்மை சாதனமான மதர்போர்ட்டை அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் அமெரிக்க எஃப்.பி.ஐ பொலிஸ் மற்றும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸில் ஒப்படைத்த நபர் யாரென கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சிஐடி அதிகாரி ஒருவரே இந்த காரியத்தை செயய்துள்ளதாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதர்போர்டு பாகங்களை வெளிநாட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு அவர்இ முன்னாள் பொலிஸ்மா அதிபர் அல்லது சட்டமா அதிபரிடனம் அனுமதி பெறவில்லை.
மதர்போர்டு காணாமல் போனது குறித்து அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவும் கருத்து தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த சிஐடி அதிகாரி மீது பொலிஸார் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிரவிக்கப்படுகிறது.