இலங்கையில் கிராமசேவகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை
#SriLanka
#Murder
Yuga
4 years ago
அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இன்று (04) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்பொல பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றிய எஸ்.எம். கபில பிரியந்த என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கிராம உத்தியோகத்தரை, காரில் பயணித்த சிலர் தாக்கிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காரின் இலக்கத்தகடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.