ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஆரம்பம்
#Colombo
Prathees
4 years ago
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை இன்று நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை குறிவைத்து கடந்த 2019 ல் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அதில் 269 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.