மஹியங்கனையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் பலி!
#Murder
#Death
Yuga
4 years ago
மஹியங்கனை – தெஹிகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் காயமடைந்த குறித்த நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தெஹிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.