முகநூலின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகல்.. முகநூலில் வெளியான தகவல்..!!

Keerthi
3 years ago
முகநூலின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி  மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகல்.. முகநூலில் வெளியான தகவல்..!!

முகநூல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய மைக் ஷெக்ரோப்பர், தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.

முகநூல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மைக் ஷெக்ரோப்பர் அடுத்த வருடத்தில், தன் பதவியை விட்டு விலகி, முக நூலின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவி வகிக்க தீர்மானித்திருப்பதாக தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, முகநூலை அதிகம் விரும்பக்கூடிய எனக்கு, இது கடினமான தீர்மானம் தான். எனினும் இத்தீர்மானம் என் குடும்பத்தினர் மற்றும் என் சேவை முயற்சிகளுக்கு அதிக நேரத்தை செலவிட உதவி புரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், முகநூலின் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப்ஸில் துணைத்தலைவராக இருக்கும் ஆண்ட்ரூ போஸ்வொர்த் தான் அடுத்த தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்றும் கூறியிருக்கிறார்.

இவரது, தலைமையில் இயங்கவுள்ள திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழு மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். முகநூலின் மகிழ்ச்சியான வருங்காலத்திற்கு, ஒரு மூத்த உறுப்பினர் என்ற முறையில் என்னால் ஆதரவு கொடுக்க முடிந்ததில் பெருமை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!