சுவிற்சலாந்தில் கொவிட் தீவிரம் குறைந்து வருகிறது.

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 22ம் திகதி முடிவடைந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்று காரணமாக 681 பேர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 228 பேர் அடங்குவர். அன்றும் எவரும் இறக்கவில்லை.
ஜெர்மன் மொழி பேசும் சுவிற்சலாந்தின் ஒவ்வொரு சில நாட்களிலும் கூட்டாட்சி விதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், பிரெஞ்சு பேசும் பகுதிகளில் பேரணிகள் அரிது. இவ்வாறு ஒரு செய்தித்தாள் கூறியது.
பிரெஞ்சு பேசும் பிராந்தியத்தில், தடுப்புசி ஏற்றுவதற்கான விருப்பான அளவு அதிகமாக இருப்பதைக்கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் குறைந்தது பாதி பேர் அங்கு முழுமையான தடுப்புசி ஏற்றியுள்ளார்கள். மற்றும் மத்திய மற்றும் கிழக்கு சுவிற்சலாந்தில், ஒன்பது மண்டலங்கள் உள்ளன. இதில் 50 சதவீதத்திற்கும் குறைவான குடியிருப்பாளர்கள் இரண்டு டோஸ் தடுப்புசிகளைப்பெற்றுள்ளனர்.



