ஒரு நாளில் 7000 பி.சி.ஆர் அறிக்கைகள்: கட்டுநாயக்கவில் ஆய்வகம் திறந்து வைப்பு
#Covid 19
#Airport
Prathees
3 years ago

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் ஆய்வகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இந்த மருத்துவ ஆய்வகம் ஒரு மணி நேரத்திற்கு சோதனைகள் செய்து 500 அறிக்கைகளை வெளியிடும் திறன் கொண்டது.
ஒரு நாளில் 7000 பி.சி.ஆர் அறிக்கைகளை வெளியிடும் திறன் கொண்டது. இத்தகைய மருத்துவ ஆய்வகம் நாட்டில் நிறுவப்பட்டது இதுவே முதல் முறை.
25 ஆம் திகதி சனிக்கிழமை மருத்துவ ஆய்வகத்தின் பணிகள் ஆரம்பழக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இனி ஹோட்டல் தனிமைப்படுத்தல் தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.



