தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Prabha Praneetha
3 years ago

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் திருப்பூர் திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செப்டம்பர் 18 மற்றும் 19ம் திகதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



