தனது உடற்பயிற்சியாளரை திருமணம் செய்ய இருக்கும் பிரபல பாப் பாடகி

பிரபல பாப் பாடகி தனது நெடுநாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரின் குரலுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிமை. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்னியின் தோழரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை நீதிமன்றம் சட்ட ரீதியாக செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கெவின் பெடர்லைன் என்பவரை 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கல்யாணமாகி மூன்றே ஆண்டுகளில் பிரிந்தனர். இதன் பின்னர் தற்பொழுது உடற்பயிற்சி பயிற்சியாளரும் நெடுநாள் நண்பருமான சாம் அஸ்காரி என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது
பிரிட்னி ஸ்பியர்ஸ் அவருடைய நீண்டகால காதலரான நடிகர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான 27 வயது உடைய சாம் அஸ்காரியை மணம் முடிப்பதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்துள்ளது. சமீபத்தில் தனது தந்தையான ஜேமி ஸ்பியர்ஸ் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அவர் தனக்கும் தனது வெகுநாள் காதலரான சாம் அஸ்காரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக கூறி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால் திருமணம் எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவலை அவர்கள் வெளியிடவில்லை



