கனடா கூட்டாட்சி தேர்தலில் வெற்றிபெற விரும்பும் கட்சிகளுக்கான ஆலோசனைகள் - கவுன்சிலர்கள்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

கனடா பிரதமர் தேர்தல் நாள் நெருங்குவதால், வாக்குகள் மூலம் வெற்றிக்கான பாதை ஓடிக்கொண்டிக்கிறது.
இதிலே வெற்றி பெறவேண்டியவர்கள் கடமைகளை தெரிவிக்கிறார்கள் கனடாவின் பெடரல் மாநகர சபை குழுவினர்.
- வீட்டுவசதி ஒரு அடிப்படைத்தேவை. வீட்டு வசதி, மானிய அலகுகள், மலிவான வாடகை வீடுகள், இவற்றை வழங்கும் கூட்டாட்சி எமக்கு தேவை.
- மாநகர சபைகள் கனடாவில் உள்ள உள்கட்டமைப்புகளில் மூன்றில் இரண்டு வைத்திருக்கின்றன. ஆனால் செலுத்தப்படும் ஒவ்வொரு டொலருக்கும் ஒன்பது சதமே கிடைக்கிறது. ஒன்றாரியோவின் 59 பில்லியன் டொலர் இடைவெளி உள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
- பசுமையான இடங்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புகிறோம். இயற்கை உள்கட்டமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறோம்.
- உந்துருளி, சைக்கிள் பாதைகள், பாதசாரி உள்கட்டமைப்பு மற்றும் பூச்சிய வாகன வாயு வெளியேற்றம் ஆகியவற்றை கோருகிறோம்.
- நாங்கள் உண்மையிலேயே வாழக்கூடிய சமூகங்களை விரும்புகிறோம், எனவே காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். உள்ளூர் காலநிலை நடவடிக்கைகளை விரைவாக அளவிடுவதற்கான திறனை வளர்க்கும் ஆதரவை ஆழப்படுத்த எங்களுடன் வேலை செய்யுங்கள்.
- கடைசியாக, தொற்று நோய்களற்ற சமூகங்களில் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளோம். இவற்றின் பிரகாரம் இறுதியா ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினை அடைய சிறந்த பணிக்குழுவை நாம் பார்க்கிறோம்.



