தமிழகத்தில் மெகா தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை!
Prabha Praneetha
3 years ago

தமிழகத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தற்போது 17 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், இரு தினங்களில் கூடுதல் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் பொருட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதன்போது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28.36 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாபெரும் தடுப்பூசி முகாமினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



