ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!v

#Corona Virus
Keerthi
3 years ago
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!v

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 70இலட்சத்து 12ஆயிரத்து 599பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில் இதுவரை ஒரு இலட்சத்து 87ஆயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 18ஆயிரத்து 645பேர் பாதிக்கப்பட்டதோடு 793பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 54ஆயிரத்து 668பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 62இலட்சத்து 70ஆயிரத்து 731ஆயிரத்து பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!