சுவிற்சலாந்து சைவ உணவகம் பிரத்தியேக இறைச்சி விற்பனையில்...

இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் உணவகத்தில் மரக்கறி உணவே வழங்கப்பட்டது. இறைச்சி மீன் என்பன இதன் உணவுப்பட்டியலில் இல்லை.
சுவிற்சாலந்து லுசேர்ன் பல்கலைக்கழகமே முதன்முதலாக இந்த வழியை கொண்டுவந்துள்ளது.
இதற்கு காரணம் பல்கலை மாணவர்களோ அல்லது இறைச்சி தொழிற்துறையோ இல்லை. சுவிஸ் இறைச்சி சங்கத்தினர் மற்றும் பண்ணையாளர்கள் இந்த இறைச்சி உணவை பட்டியலில் இருந்து விலக்க கூறுகின்றனர்.
இறைச்சி சங்கத்தின் ருய்டி ஹட்ஒன் தெரிவிக்கையில் இளம் சுவிஸ் சிவிலியன்களின் உணவு உண்ணும் அளவை கட்டுப்படுத்துவது நல்லதல்ல என்றுள்ளார்.
லுகஸ் போர்ட்மன் பல்கலைக்கழக பேச்சாளர் கூறுகையில் இந்த மாற்றமானது ஒரு கல்வி நடவடிக்கையாகவும் பல்கலைக்கழகத்தின் முயற்சியில் ஒன்றாகவும் உறுதியாகவும் இருக்கும். இறைச்சி உண்ண விரும்புவோர் வாங்க முடியும் அல்லது வீட்டில் இருந்தும் கொண்டுவர முடியும், அவ்வாறு கொண்டுவரும் போது எமது அவனில் அவற்றை சுடுகாட்ட வேண்டும் என்றாலும் அதனை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



