சீனி- அரிசிக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்:வர்த்தமானியும் வெளியீடு!

சீனி, அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனியின் விலை 122 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாகவும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அல்லது சிவப்புச் சம்பா அரிசி கிலோ ஒன்றின் விற்பனை விலை 103 ரூபாவாகவும், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



