இந்திய வம்சாவளி கோடீஸ்வரரிடமிருந்து CHF125 மில்லியன் வரி அறவீடு உள்ளது.

பிரகாஷ் ஹிந்துஜா (Prakash Hinduja) என்பவர் செலுத்தத் தவறிய CHF125 மில்லியன் ($ 136 மில்லியன்) செலுத்தப்படாத வரியை பெற்றுக்கொள்ள ஜெனீவா எதிர்பார்க்கிறது. இவர் தற்போது மொனாக்கோவில் வசிப்பதாக பொய் கூறியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
76 வயதான அவர் தனது குடும்பத்துடன் ஜெனீவா புறநகர்ப் பகுதியான கொலோனியில் வசிக்கும் போதே, சுவிட்சர்லாந்துக்கு வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மொனாக்கோவில் வசிப்பதாக பொய் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
24 heures செய்தியின்படி, 2018 இல் வீட்டு ஊழியர்கள் மீதான தவறான நடத்தை மற்றும் குறைவான ஊதியம் பற்றிய விசாரணையில் அவரது வதிவிட நிலை தெரியவந்தது. அவரது வீடு சோதனை செய்யப்பட்டு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டன. 2009 மற்றும் 2017 க்கு இடையில் இந்துஜா CHF 19 மில்லியன் வருமானம் மற்றும் குறைந்தது CHF 1 பில்லியன் சொத்துகளுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரகாஷ் ஹிந்துஜா தனது மனைவியுடன் 2000 ஆம் ஆண்டில் சுவிஸ் குடியுரிமையைப் பெற்றார். அவரது மூன்று குழந்தைகளும் சுவிஸ் குடியுரிமை பெற்றனர். ஹிந்துஜா குழுமம் உலகம் முழுவதும் வங்கி மற்றும் நிதி, போக்குவரத்து, ஆற்றல், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 70,000 பேரை பணியாளர்களாகக் கொண்டுள்ளது.



