சுவிற்சலாந்தில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 15 சுகாதார காப்புறுதிக் குறிப்புக்கள்....

1 சுவிற்சலாந்தில் அனைவருக்கும் சுகாதார காப்புறுதி அவசியமானது. இது அரசாங்கத்தின் சட்டமான LAMal என அழைக்கப்படும். இதன் உயர் காப்புறுதியை சகலருக்கும் வழங்குவதே நோக்கம்.
சகல காப்புறுதிசெய்யப்பட வேண்டியவர்களையும் காப்புறுதிக்காரர்கள் அவர்களது எந்த உடல்நிலை என்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
2. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சுவிற்சலாந்திலே அதிகளவு காப்புறுதி கட்டணம் அறவிடப்படுகிறது.
3 சுவிஸில் சுகாதாரக் காப்புறுதி தனிநபர்களினாலும் அரசாங்கத்தினாலும் கட்டப்படுகிறது. 2016 இல் அரசாங்கம் 1.4 பில்லியன் பிராங்குகள் அல்லது ஒருவருக்கு 1900 பிராங்குகள் கட்டியுள்ளது
4 சுகாதாரக்காப்புறுதி இருவகையாக உள்ளது. முதலாவது அடிப்படைக்காப்புறுதி. இது உங்கள் கன்டோனில் வைத்தியாசாலையில் சுகயீனம் அல்லது விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டால் கொடுக்கப்படுவது. இரண்டாவது அடிப்படை காப்புறுதியில் அடங்காத பல், மாற்று மருந்து, மேலதிக வைத்தியசாலை செலவு, மற்றும் வேலை செய்ய முடியாது போனல் கொடுக்கப்படும் மொத்த தொகை.
5. சுகாதார காப்புறுதி அவசியமா? ஆம். உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் காப்புறுதி அவசியம். நீங்கள் செய்யாவிட்டால் 3 மாதங்களில் கன்டோனில் இருந்து கட்டணம் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்புறுதியாளர் மூலம் அனுப்பபடும்.
6. சுவிற்சலாந்தில் காப்புறுதி திட்டங்களும் கட்டணங்களும் முழுநாட்டுக்கும் ஒரே மாதிரியா? இல்லை. கன்டோனுக்கு கன்டோன் வித்தியாசப்படும். மலைப்பிரதேச கன்டோன்களில் ஆரோக்கியம் கூடியதால் அங்கு கட்டணம் குறைவாக இருக்கும்.
7. அடிப்படைக்காப்புறுதி சகல் மருத்துவ செலவையும் உள்ளடக்குமா? இல்லை. உங்களிடம் செலவின் 10வீதம் அறவிடப்படும். சில வேளை 20வீதமாகவும் இருக்கும். அதாவது எந்த வகை மருந்தை, தரம் கூடியது குறைவானது என்பதை பொறுத்து. எனினும் கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்குகள் காணப்படும்.
8. எவ்வாறு மருத்துவ காப்புறுதி கொடுப்பனவு செயல்படும்? காப்புறுதி நிறுவனம் உங்களுக்கான காப்புறுதியை நீங்கள் செலுத்தி, உங்கள் மூலம் 10வீதத்தினை அறவிட்டுக்கொண்டு மிகுதி 90வீதத்தினை உங்களுக்கு காப்புறுதி நிறுவுனம் தரும்.
9. உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு காப்புறுதி நிறுவனத்தையும் நீங்கள் நாடலாம்.
10. அடிப்படைக்காப்புறுதிக்கு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும். உங்கள் வயது உடல்நிலை எப்படியாயினும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாவது வகைக்கு உங்களிடம் உடல்நிலை சம்பந்தப்பட்ட விபரங்களை கோரலாம் அல்லது மறுக்கலாம்.
11. நான் எனது அடிப்படைக்காப்புறுதியை மாற்றலாமா? ஆம். எவரும் தமது அடிப்படைக்காப்புறுதியை மாற்றக்கூடிய அதிகாரம் கொண்டுள்ளனர். ஒவ்வொருவருடம் 31 ஓக்டோபர் அல்லது ஜுலை 1ல் ஒரு மாதத்திற்குள் ரத்து செய்யலாம்.
12 அரசாங்க பொது சுகாதார கந்தோர் தகுதிவாய்ந்த காப்புறுதியாளர் பட்டியலை வைத்திருக்கும். உங்களுக்கு தேவைக்கேற்ப விதத்தில் குறிப்பிட்டவரை தேர்ந்தெடுக்கலாம்.
13. சுகாதார காப்பீட்டு கட்டணம் குறைவாக வர நீங்கள் என்ன செய்யலாம். முதலாவது முன்கூட்டியே செலுத்துதல். இதன் மூலம் கழிவு கிடைக்கும். இரண்டாவது தேவையற்றவையை தவிர்த்தல் மூன்றாவது குறைந்த காப்புறுதித்திட்டத்தை பெறல்.
14. மலைப்பிரதேச விபத்துக்களுக்கு காப்புறுதியானது நீங்கள் கேட்டு பெறவேண்டும். பொதுவான முறையில் கிடைக்கும் என எண்ணிவிடலாகாது.
15. வெளிநாட்டில் இந்த காப்புறுதி செல்லுப்படியாகுமா? சில நாடுகள் அதாவது EU or EFTA நாடுகளில் நீங்கள் காப்புறுதி தொகையை மீளப்பெறலாம்.



