சஹஜ் சமாதி தியானம்

Prathees
4 years ago
சஹஜ் சமாதி தியானம்

சஹஜ் சமாதி தியானத்தின் மூலம் உண்மையான ஓய்வை , முயற்சியின்றி எளிய வழியில் பெறலாம்
விழிப்புணர்வினை அதன் இயல்பான நிசப்த ஆழத்திற்கு செல்ல அனுமதிக்கும் ஒரு முயற்சியற்ற சக்தி வாய்ந்த பயிற்சியே தியானக் கலை பயிற்சியாகும். இந்தப் பயிற்சி சஹஜ் சமாதி தியானம் என்றும் அழைக்கப் படுகின்றது.

சமஸ்க்ருதத்தில் சஹஜ் என்றால் முயற்சியற்ற என்று பொருளாகும். சமாதி என்பது நிசப்தமான ஆயினும் உயிரோட்டமுள்ள விழிப்புணர்வு நிலை என்பதாகும். அதாவது விழிப்பும்,உறக்கமும், கனவுமற்ற ஓர் நிலை. அந்நிலையில் அளவற்ற ஆற்றல் அறிவுத் திறன் படைப்பாற்றல் எல்லையற்ற அமைதி மற்றும் சாந்தி கிடைக்கின்றன.

உங்களது தியானப் பயிற்சியில் மனம் முயற்சியின்றி இந்த சமாதி நிலையினை அடைகின்றது. தியானம் நிறைவுற்ற பின்னர் ஆற்றல், தெளிவு, படைப்பாற்றல், தவிர முக்கியமாக ஆழ்ந்த உள் அமைதி ஆகிய பண்புகளை பெறுவீர்கள்.

தியானப் பயிற்சி, ஓர் எளிய மனப் பயிற்சியாகும். எளிதாக யார் வேண்டுமானாலும் கற்கலாம். 20 நிமிட நேரமே எடுத்துக் கொள்ளக் கூடிய தினசரி தியானப் பயிற்சியில் உங்கள் வாழ்க்கையே மாற்றம் காணலாம். தினமும் இரு முறை செய்ய 20 நிமிட நேரம் இல்லையே என்று எண்ணினால் கவலைப் பட வேண்டாம். இந்த தியானத்தினால் கிடைக்கும் மனத்தெளிவு உங்களுடைய திறமையில் குறைந்த முயற்சியில் கூடுதலாக ஏற்படக் கூடிய ஆற்றலை கணக்கிட்டுப் பாருங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4