யப்பான் ஹமாவோகா அணு நிலையித்தில் தீ சமிஞை ஒலி!
Mugunthan Mugunthan
4 years ago
ஹமாவோகா அணு நிலையத்தில் இன்று தீ சமிஞை ஒலி அடித்ததை அங்கிருந்த ஒரு இயக்குனர் தெரிவித்தார்.
இது இந்த கிழமையில் இரண்டாவது தடவை என்றும் எந்தவித கசிவோ அல்லது கதிரியக்க துகள்களே வெளியே பரவவில்லை என்று அந்த இயக்குனர் உறுதி செய்தார்.
புகையெழுந்ததை உறுதிசெய்த இயக்குனர், தீயணைப்பு நிலையத்திற்கு அறிவிப்பு கிடைத்தவுடன் அவர்கள் பரிசோதித்த வேளை தீ யெங்கும் இல்லை என்றனர். கடந்த வியாழன் இந்த கட்டிடத்தில் மின் இணைப்பில் இருந்து புகை ஏற்பட்டது.
இவ்வணு நிலையம் தனது இயக்கத்தனை மே 2011ல் பாரிய புவியதிர்ச்சி மற்றும் சுனாமியின் பின் பிரதமர் நாடோ கன்னின் வேண்டுகோளின் படி நிறுத்திக்கொண்டது.