வயிற்று வலி தாங்க முடியாமல் ஜெயந்தி தற்கொலை.
Nila
4 years ago

கணவரை பிரிந்து வசித்து வரும், சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரியை சேர்ந்தவர் வெங்கம்மா.
இவருக்கு ஒரு மகனும், 12 வயது மகளும் உள்ளனர். மகளின் பெயர் ஜெயந்தி.
சமீபத்தில் துணி மாற்றுவதாக உள்ளே சென்ற சிறுமி ஜெயந்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததாக கூறப்படுகிறது.
இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தபோது சிறுமி ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சமீபத்தில் ஜெயந்தி பூப்படைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.



