தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது நிகழ்ச்சி ஒத்திவைப்பு

#India #Tamil Nadu #LANKA4 #education #Vijay #ChiefMinister #Award #L4
Prasu
50 minutes ago
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது நிகழ்ச்சி ஒத்திவைப்பு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட, சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் கட்ட கல்வி உதவித்தொகை மற்றும் பரிசளிப்பு விழா கடந்த வாரம் இடம்பெற்றது.

தற்போது 2வது கட்ட பரிசளிப்பு விழா நாளை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்வில் எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள் என்ற விவர பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.

இந்நிலையில், நாளை நடக்கவிருந்த தவெக கல்வி விருது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆனந்த் டெல்லியில் உள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!