பாலையடிவட்டை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீதி மின்விளக்குகள் வழங்கி வைப்பு!
பாலையடிவட்டை வட்டாரத்தின் வீதிகளை ஒளிரச் செய்து, மக்களின் இரவு நேரப் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் வீதி மின்விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் வீதிகளில் பயணிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதுடன், காட்டு யானைகளின் நடமாட்டத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் மக்கள் பிரதிநிதித்துவப் பணிகளில் முக்கியமானவை என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் அ. தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன், உப தவிசாளர் த. கயசீலன், பிரதேச சபை உறுப்பினர் ம. கோபிநாத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ம. சுகிகரன், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற்கொண்டு எதிர்காலத்திலும் பல்வேறு மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.