பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் பிணை – இன்று விடுதலை!

#SriLanka #Trincomalee #LANKA4 #Court #Bail
Abi
36 minutes ago
பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் பிணை – இன்று விடுதலை!

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து புத்தர் சிலை ஒன்றை நிறுவியமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து அவர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியமை மற்றும் திருகோணமலை நீதிமன்றத்தையும் அநுராதபுரம் நீதிபதி ஒருவரையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தேரர் சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த மன்னிப்பை ஏற்றுக்கொண்ட திருகோணமலை நீதவான் நீதிமன்றம், பலாங்கொட கஸ்ஸப தேரரைப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!