260 கோடி வசூலித்த சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்

#TamilCinema #LANKA4 #Collection #surya #Movie #L4
Prasu
41 minutes ago
260 கோடி வசூலித்த சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம்

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த் ராஜ், லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து திரையரங்குகளில் ஓடும் திரைப்படம் சீன்.

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு 6ம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் 2026ம் ஆண்டில், சூர்யாவுக்கு கிடைத்த மூன்றாவது தொடர் வெற்றிப் படமாகவும் இது அமைந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ.310 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரூ.210 கோடி வசூலித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!