லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு – விளக்கம் கோரிய நுகர்வோர் விவகார அதிகார சபை!
#SriLanka
#prices
#Laugfs gas
#LANKA4
Abi
26 minutes ago
லாஃப்ஸ்(LAUGFS) எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளை நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபை அழைத்துள்ளது.
இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (16) நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர்.
எரிவாயு விலை அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து, அதற்கான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு விலைகளை அதிகரித்திருந்தது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 6,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.