தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் கட்டுநாயக்கில் மீட்பு – இருவர் கைது!

#SriLanka #ARREST #drugs #LANKA4 #Thailand #Katunayaka
Mithra
40 minutes ago
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் கட்டுநாயக்கில் மீட்பு – இருவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 86 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து மொத்தமாக 8 கிலோ 600 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 86 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!