மிஹிந்தலை பேருந்து விபத்து: சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு!

#SriLanka #Death #Accident #Hospital #Bus #LANKA4
Mithra
36 minutes ago
மிஹிந்தலை பேருந்து விபத்து: சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு!

மிஹிந்தலை, ரம்பே பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி, மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியோயா சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதன்போது, அவற்றில் ஒரு பேருந்தின் பின்னால் பயணித்த மற்றுமொரு பேருந்தும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த 76 பயணிகள் அனுராதபுரம், மெதவச்சி மற்றும் மிஹிந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 51 பேர் தொடர்ந்தும் அனுராதபுரம் மற்றும் மெதவச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி நேற்று (15) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி பராக்கிரமபுர பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!