மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு சிறீதரன் எம்.பி. இரங்கல்

#SriLanka #Death #M K Sivajilingam #LANKA4 #Politician #Sridaran_MP #condolence #L4
Prasu
1 hour ago
மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு சிறீதரன் எம்.பி. இரங்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் காலமானார்.

இந்நிலையில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதனின் மறைவு, ஈழத் தமிழர்களின் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆரம்ப காலகட்டங்கள் முதல், போருக்குப் பின்னரான இற்றைவரையான காலப்பகுதி வரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும் மீட்சிக்காகவும் அவர் ஆற்றிய கைங்கரியங்கள் தமிழினத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!