ஸ்கந்தபுரம் சந்திப்பாலம் சேதம் – கனரக வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

#SriLanka #Kilinochchi #LANKA4 #Public #vehicle #Traffic #Transport
Abi
34 minutes ago
ஸ்கந்தபுரம் சந்திப்பாலம் சேதம் – கனரக வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான ஸ்கந்தபுரம் சந்திப்பாலம் இன்று (14.11.2026) சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்கள் பாலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வீதிகள் ஊடாகப் பயணிக்குமாறு சற்றுமுன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கந்தபுரம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அன்றாடப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தும் முக்கிய இணைப்புப் பாதையாக இந்தப் பாலம் காணப்படுகிறது.

இந்நிலையில், பாலத்தின் சேதம் காரணமாகப் போக்குவரத்துச் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும், அறிவிக்கப்பட்ட மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், பாலத்தின் நிலைமை மற்றும் போக்குவரத்து தொடர்பான அடுத்தகட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!