இலங்கையின் படகு நிர்மாணத் துறையை நவீனமயப்படுத்த நோர்வேயுடன் பேச்சுவார்த்தை!

#SriLanka #Parliament #LANKA4 #Boat #Norway #discussion
Abi
19 minutes ago
இலங்கையின் படகு நிர்மாணத் துறையை நவீனமயப்படுத்த நோர்வேயுடன் பேச்சுவார்த்தை!

இலங்கையின் கடற்றொழில், படகு நிர்மாணம் மற்றும் கடல்சார் பொறியியல் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், நோர்வேயின் பெர்கன் – வெஸ்ட்லாந்து பிராந்தியத்திற்கான இலங்கைத் தூதுவர் ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையின் படகு நிர்மாணத் துறையில் முக்கிய பங்காற்றும் Cey-Nor நிறுவனத்தின் எதிர்கால அபிவிருத்தி, உற்பத்தித் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான உற்பத்திக் கட்டமைப்புகளை உருவாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கப்பல்கள் மற்றும் மீன்பிடிப் படகுகளை நிர்மாணித்தல், கடல்சார் பொறியியல் செயற்பாடுகளை மேம்படுத்துதல், நவீன இயந்திரவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பை நவீனமயப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

கடல்சார் தொழில்நுட்பத்தில் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட நோர்வேயின் தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் மற்றும் நவீன உற்பத்தி முறைகளை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூர் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய நிறுவனமாக Cey-Nor நிறுவனத்தை வளர்த்தெடுப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் ஊடாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – நோர்வே நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!