இலங்கை – இந்திய இராணுவங்களின் 12ஆவது கூட்டு பயிற்சி ஆரம்பம்!
#India
#SriLanka
#District
#LANKA4
#IndianArmy
#Military
Abi
34 minutes ago
இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையிலான வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி XII – 2026’ நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
நவம்பர் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சி, பொலனறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் முன்னெடுக்கப்படுகிறது.
இரு நாடுகளின் இராணுவங்களும் இணைந்து நடத்தும் இந்த 12ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவக் குழுவினர் நவம்பர் 13ஆம் திகதி மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுச் செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.