நுவரெலியாவில் பேருந்துகள் மோதி விபத்து – 28 பேர் காயம்!

#SriLanka #Accident #NuwaraEliya #Bus #District #LANKA4 #Injury
Abi
51 minutes ago
நுவரெலியாவில் பேருந்துகள் மோதி விபத்து – 28 பேர் காயம்!

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (14.11.2026) இடம்பெற்ற இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!