ஊழல், மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் பாதுகாப்பு இல்லை – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு!

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Criminal
Abi
33 minutes ago
ஊழல், மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் பாதுகாப்பு இல்லை – ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு!

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் ஊழல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

37ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் 2024ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் ஆதாயங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதேவேளை, அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கான முறையிலும் தெளிவான நோக்கத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள், தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் அரசியல் பலத்தை அவை உணர்ந்துள்ளமையைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!