மக்கள் நல நிதி ஒதுக்கீடுகள் எங்கே? அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சாணக்கியன் எம்.பி.!

#SriLanka #Parliament #government #LANKA4 #Public #Aswesuma #Economic
Abi
37 minutes ago
மக்கள் நல நிதி ஒதுக்கீடுகள் எங்கே? அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சாணக்கியன் எம்.பி.!

2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்கள் மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்புரித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்திடம் பல முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.

கடந்த நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி–பதில் நேரத்தின்போதே அவர் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கம் 1,244.1 பில்லியன் ரூபா முதன்மை வரவு உபரியைப் பதிவு செய்துள்ளது. 

இது சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கியிருந்த 72 பில்லியன் ரூபா இலக்கை விடப் பல மடங்கு அதிகமாகும்.

எனினும், அதிகரித்த வரி வருமானச் சேகரிப்புக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவில் மூலதனச் செலவினங்கள் மேற்கொள்ளப்படாமையும் இந்த நிதி உபரிக்கான காரணங்களில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூலதன ஒதுக்கீட்டில் செலவிடப்பட்டது 16.1% மாத்திரம்!

2026ஆம் ஆண்டுக்காக 1,719 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் ஆறு மாதங்களில் 277 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. 

இது மொத்த ஒதுக்கீட்டில் 16.1 சதவீதமாகும்.

அஸ்வெசும நிதியிலும் குறைந்த செலவினம்!

அஸ்வெசும உள்ளிட்ட குடும்பங்களுக்கான பண உதவித் திட்டங்களுக்கு 2026ஆம் ஆண்டில் 231 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், முதல் ஆறு மாதங்களில் 89.6 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. 

இது மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 38 சதவீதமாகும். சாணக்கியன் எம்.பி. முன்வைத்த ஐந்து முக்கிய கேள்விகள்: 2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் தமக்கான மூலதன நிதி ஒதுக்கீடுகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்திய ஐந்து அமைச்சுகள் எவை?

முதல் ஆறு மாதங்களில் அமைச்சுகளால் தமக்கான மூலதன நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போனதற்கான பிரதான காரணங்கள் என்ன?

அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்த ஒப்பந்ததாரர்களின் கட்டணப் பட்டியல்கள் நிதி அமைச்சுக்குக் கிடைத்தும், ஜூன் 30ஆம் திகதி வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?

2026ஆம் ஆண்டுக்கான பயன்படுத்தப்படாத மூலதன நிதி ஒதுக்கீடுகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வேறு தேவைகளுக்காக நிதி அமைச்சு மீள்பகிர்வு செய்யவுள்ளதா?

அஸ்வெசும உள்ளிட்ட குடும்பங்களுக்கான பண உதவித் திட்டங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியைப் பயன்படுத்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது அவர்களுக்கான நிதியுதவித் தொகையை உயர்த்தவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அபிவிருத்திப் பணிகளுக்காகவும், வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒதுக்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியை இந்த விவகாரம் எழுப்பியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாததற்கான காரணங்கள் மற்றும் எஞ்சிய நிதியைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவான பதில் வழங்கப்பட வேண்டும் என்பதே சாணக்கியன் எம்.பி.யின் கேள்விகளின் முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!