போலி செயற்கை நுண்ணறிவு காணொளிகளை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை!

#SriLanka #Colombo #LANKA4 #Flood #municipal council #Legal #Fake
Abi
27 minutes ago
போலி செயற்கை நுண்ணறிவு காணொளிகளை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை!

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகச் சித்தரிக்கும் போலியான AI காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை அமர்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 06ஆம் திகதி கொழும்பில் பெய்த கடும் மழையால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமை தொடர்பில் நடைபெற்ற விசேட அமர்வில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது, சிலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் போலியான காணொளிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 'One Galle Face' வர்த்தக வளாகம் நீரில் மூழ்கியிருப்பதைப் போன்றும், குளமொன்றில் இறங்கி நீராடுவதைப் போன்றும் உருவாக்கப்பட்ட AI காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எச்சரித்த மேயர், இயற்கை அனர்த்தங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!