தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது!

#SriLanka #ARREST #LANKA4 #Smuggling #South #Navy #Sea
Abi
31 minutes ago
தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – 5 பேர் கைது!

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகும், அதில் பயணித்த ஐந்து சந்தேக நபர்களும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. 

இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகு, போதைப்பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர்ச்சியாக விசேட கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த நவம்பர் 5ஆம் திகதி தெற்கு ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையின்போது 132 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 57 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினும் கைப்பற்றப்பட்டிருந்தன.

அத்துடன், அந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்தப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!