சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் உடன்படிக்கைக்கு இலங்கை தயாராகிறதா? – அனில் ஜயந்த தகவல்!

#SriLanka #International #Minister #LANKA4 #Agreement #discussion
Abi
35 minutes ago
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் உடன்படிக்கைக்கு இலங்கை தயாராகிறதா? – அனில் ஜயந்த தகவல்!

இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (12) இரவு ஒளிபரப்பான 'தெரண 360' விசேட அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்றை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காகத் தாம் உள்ளிட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழு இதுவரை கூடி ஆராயவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சரவையின் இறுதிக் கூட்டத்திலேயே இக்குழு நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னர் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாக இருந்ததாகவும், தற்போது பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் குறித்த குழு கூடி ஆராய்ந்த பின்னர், தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான அணுகுமுறை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அமைச்சரவையே தீர்மானிக்கும் எனவும் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!