சுரேஷ் சாலே விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மஹிந்த பத்திரண மன்னிப்புக் கோரல்!

#SriLanka #Investigation #Easter Sunday Attack #LANKA4 #Case #Court #Suresh Sallay
Abi
25 minutes ago
சுரேஷ் சாலே விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மஹிந்த பத்திரண மன்னிப்புக் கோரல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே தொடர்பில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அசங்க நவரத்ன, திலித் ஜயவீர, மஹிந்த பத்திரண, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவரான பொதுஜன பெரமுனவின் சித்தாந்தவாதி மஹிந்த பத்திரண சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், மன்னிப்பை உறுதிப்படுத்தும் வகையில் சத்தியக்கடதாசி ஒன்றையும் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் தமது விளக்கங்களையும் வாதங்களையும் முன்வைக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!