நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச!
#SriLanka
#Wimal Weerawansa
#Investigation
#Department
#LANKA4
#Court
#Criminal
Abi
26 minutes ago
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) காலை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கில் விமல் வீரவன்ச பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேயின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பில் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே கொழும்பு கோட்டை நீதவான் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்