ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு!

#SriLanka #Parliament #government #Employees #LANKA4 #Salary #Public
Abi
22 hours ago
ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு!

2027ஆம் ஆண்டில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக 2,000 பில்லியன் ரூபாவை (2 இலட்சம் கோடி ரூபா) மூலதனச் செலவினமாக ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நேற்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது பெரும் சவாலாக இருந்ததாகவும், தற்போது இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும், அடிப்படைச் சம்பள அதிகரிப்புடன் சில துறைகளுக்கான கொடுப்பனவுகளும் உயர்த்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் எரிபொருள் மானியத்திற்காக 98 பில்லியன் ரூபாவும், டிட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகள், வீடுகள் மற்றும் இழப்பீடுகளுக்காக 500 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!