அனுராதபுரம் விபத்து - பாதிக்கப்பட்டவர்களை அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

#SriLanka #Death #Accident #Anuradapura #Road #LANKA4 #Rescue #L4
Prasu
1 day ago
அனுராதபுரம் விபத்து - பாதிக்கப்பட்டவர்களை அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

அனுராதபுரம் ரம்பாவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்து 60 பேர் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்பாவெவ வைத்தியசாலையில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 61 பேரில் 40 ஆண்களும், 20 பெண்களும் அடங்குவர்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் ரம்பாவெவ பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தேவைப்பட்டால் தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக வட மத்திய மாகாண சபை மற்றும் மாவட்ட செயலகம் தலையிட்டு தேவையான வசதிகளை செய்து கொடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் - 071 435 2016 - ரஞ்சித் விமலசூரிய

பிரதான அமைச்சின் செயலாளர் - 071 294 8050 - சமந்த ஜயலத்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!