கடும் மழை எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு

#SriLanka #Warning #Climate #Department of Meteorology
Prasu
1 day ago
கடும் மழை எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் தாழமுக்கப் பிராந்தியத்தின் காரணமாக, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வானிலை முன்னறிவிப்பைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விழிப்புடன் இருப்பதுடன், ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்குத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தயவுசெய்து பின்வரும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்:

  1. வானிலை அறிவித்தல்கள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைச் செய்திகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல்.
  2. அவசரகாலப் பதிலளிப்புக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல்.
  3. பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ள பிரதேசங்களை அடையாளம் காணுதல்.
  4. ஏதேனும் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில் உடனடியாகச் செயற்படுவதற்குத் தயாராக இருத்தல்.

images/content-image/1794331043.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!