குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் – உயர் நீதிமன்றில் அறிவிப்பு!

#SriLanka #Crime #government #LANKA4 #Court
Abi
54 minutes ago
குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் – உயர் நீதிமன்றில் அறிவிப்பு!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்களை முன்மொழியவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (09) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த சட்டமா அதிபர், அவை தொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பமானது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து இதுவரை 26 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!