கொழும்பில் மேகவெடிப்பால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

#SriLanka #Colombo #Rain #LANKA4 #Flood
Mahathi
24 minutes ago
கொழும்பில் மேகவெடிப்பால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!

கொழும்பில் நேற்று (06) மாலை குறுகிய நேரத்தில் பெய்த மிகக் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெறும் 49 நிமிடங்களில் 120 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான அதீத மழைப்பொழிவு 'மேகவெடிப்பு' (Cloudburst) என அழைக்கப்படுகிறது.

பொதுவாக, குறுகிய காலப்பகுதியில் மிகக் குறைந்த நிலப்பரப்பில் அதிகளவான மழை பெய்வதே மேகவெடிப்பின் சிறப்பம்சமாகும். 

இவ்வாறான மழை சில நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை நீடிக்கக்கூடும்.

வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காற்று மேல்நோக்கி எழுவதால் உருவாகும் கார்முகில் மேகங்களில் நீர்த்துளிகள் ஒன்றிணைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. 

பின்னர் மேல்நோக்கிய காற்றின் வேகம் குறையும்போது அதிகளவான நீர் ஒரே நேரத்தில் மழையாகப் பொழிகிறது.

இத்தகைய திடீர் மழைப்பொழிவு நகர்ப்புறங்களில் வெள்ளப்பெருக்கையும், மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

குறுகிய நேரத்தில் அதிகளவு மழை பெய்வதால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!