கனடாவில் பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சிறையில் மரணம்

#Death #CANADA #Murder #Women #Prison #LANKA4 #prisoner #L4
Prasu
58 minutes ago
கனடாவில் பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சிறையில் மரணம்

மொன்றியாலில் வீடொன்றில் 'வீடியோ கொன்பரன்ஸ்' சந்திப்பில் ஈடுப்பட்டிருந்த வேளையில் படுகொலை செய்யப்பட்ட லீலா பென் சேலம் என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சிறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 வயதான யூசுப் மூசாவீ என்பவர் கடந்த நவம்பர் 2ம் திகதி சிறையிலேயே உயிரிழந்துள்ளார் என மொன்றியல் மரண விசாரணை அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் திகதி ரெனீ-லெவெஸ்க் பூலேவார்ட் பகுதியில் அமைந்துள்ள பென் சேலத்தின் குடியிருப்பில் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மூசாவீயின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை கண்டறிவதற்காக ஆண்ட்ரேஜீன் லூக் தலைமையிலான மரண விசாரணை அதிகாரியால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போர்டாக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூசாவீ, எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதி மொன்றியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!