போதைப்பொருள் ஒழிப்புக்கு மதத் தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அரசாங்கம் அழைப்பு!

#SriLanka #government #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Religion
Abi
2 hours ago
போதைப்பொருள் ஒழிப்புக்கு மதத் தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – அரசாங்கம் அழைப்பு!

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அகன்று செல்” தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான மதிப்பீட்டுக் கூட்டம் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன, மத, வயது வேறுபாடின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் போதைப்பொருள் அச்சுறுத்தல் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகவும், வழிபாட்டுக்குரியவர்களாகவும் கருதப்படுபவர்களிடம்கூட இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளமை கவலைக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் ஒழிப்பு என்பது இன்றைய தேசத்தின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல், கைது செய்யும் பொறிமுறையை வலுப்படுத்துதல், தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் பலமான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பில் சமூகத்தின் கருத்தியல் மற்றும் மனப்பாங்கு மாற்றம் மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், இதனை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளதாகத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகவும் உறுதியுடனும் இந்த தேசிய முயற்சியை முன்னெடுத்தால், போதைப்பொருள் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

மேலும், எதிர்காலச் சந்ததியினர் பெருமையுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கும் நோக்கில், போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியத் திட்டத்தில் தீவிர பங்காளிகளாக இணையுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!