10 மாதங்களில் இலங்கையில் 289 காட்டு யானைகள் உயிரிழப்பு – அதிர்ச்சித் தகவல்!
இலங்கையில் 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 289 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 95 யானைகளின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
திணைக்களத்தின் தரவுகளின்படி, யானைகளின் உயிரிழப்புக்கான முக்கிய காரணங்களாக துப்பாக்கிச் சூடு, மின்சாரம் தாக்குதல் மற்றும் ஹக்கப்பட்டாஸ் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
அதன்படி:
- துப்பாக்கிச் சூட்டினால் – 42 யானைகள்
- மின்சாரம் தாக்கி – 34 யானைகள்
- ஹக்கப்பட்டாஸ் வெடிப்பினால் – 34 யானைகள்
- சடலம் அழுகியதால் ஏற்பட்ட பாதிப்புகள் – 23 யானைகள்
- காயங்கள் தொற்றுக்குள்ளானதால் – 11 யானைகள்
- புழுத் தொற்றினால் – 9 யானைகள்
- கிணறுகள் மற்றும் குழிகளில் விழுந்து – 8 யானைகள்
- நீரில் மூழ்கி – 7 யானைகள்
- விபத்துகளில் – 7 யானைகள்
- விஷம் கொடுக்கப்பட்டதால் – 4 யானைகள்
- தொடருந்து விபத்துகளில் – 3 யானைகள்
பிராந்திய ரீதியாக அதிகளவான யானை உயிரிழப்புகள் கிழக்கு வனஜீவராசிகள் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன. அங்கு 60 யானைகள் உயிரிழந்துள்ளன.
மேலும், அனுராதபுரத்தில் 57 யானைகளும், பொலன்னறுவையில் 42 யானைகளும், ஊவா பிராந்தியத்தில் 33 யானைகளும் உயிரிழந்துள்ளன.
வடமேற்கு பிராந்தியத்தில் 21 யானைகளும், தெற்கு பிராந்தியத்தில் 19 யானைகளும், வவுனியாவில் 18 யானைகளும், மத்திய பிராந்தியத்தில் 15 யானைகளும், திருகோணமலையில் 14 யானைகளும் உயிரிழந்துள்ளன.
அத்துடன், புத்தளத்தில் 9 யானைகளும், கிளிநொச்சியில் ஒரு யானையும் உயிரிழந்துள்ளன.
துப்பாக்கிச் சூடு, சட்டவிரோத மின்சார வேலிகள் மற்றும் வெடிபொருள் பொறிகள் உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் காட்டு யானைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணிகளாகத் தொடர்வது இந்தப் புள்ளிவிபரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.