கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விசாரணை – நாமல் ராஜபக்ச நீதிமன்றில் ஆஜர்!
#SriLanka
#Investigation
#Namal Rajapaksha
#LANKA4
#Court
#inquiry
Mahathi
2 hours ago
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் கடந்த 03ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டுகள் அடங்கிய மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த வழக்கில் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவும் இன்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.